உள்ளூர் செய்திகள்

ரூ.13 லட்சம் மோசடி

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற கல்லுாரி பேராசிரியர் வள்ளியப்பன் 85. இவரிடம் கடந்த 19ம் தேதி போனில் பேசிய நபர் தன்னை சி.பி.ஐ., அதிகாரி என்று கூறியுள்ளார். வள்ளியப்பனின் வங்கி கணக்கு எண்ணில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்துள்ளது என்றும் அதற்கு அவரை டிஜிட்டல் அரஸ்ட் செய்வதாகவும் மிரட்டியுள்ளார். அவர் கூறியதை நம்பிய வள்ளியப்பன் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.13 லட்சத்தை மாற்றியுள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வள்ளியப்பன் சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஏமாற்றிய நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை