உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மார்கழி பிறப்பால் களை கட்டிய கோலப்பொடி விற்பனை

மார்கழி பிறப்பால் களை கட்டிய கோலப்பொடி விற்பனை

திருப்புத்துார்: திருப்புத்துாரில் மார்கழி பிறப்பை முன்னிட்டு கலர் கோலப்பொடி விற்பனை களை கட்டியது. மார்கழி என்றாலே வண்ணக்கோலங்கள் தாம் நினைவுக்கு வரும். துவக்க காலத்தில் வெள்ளைக் கோலப்பொடி, காவித் துாள் பயன்படுத்தி புள்ளிக் கோலங்கள் வீடு வாசல்களை அலங்கரித்தன. பின்னர் ரங்கோலி பாணியில் வண்ணக் கோலம் அதிகரித்தன. நேற்று மார்கழிப்பிறப்பை முன்னிட்டு வீடுகளில் அதிகாலையில் பெண்கள் வண்ணக்கோலமிட்டனர். நேற்று காலை முதல் திருப்புத்துார் காந்தி சிலை பகுதியில் சாலையோர கோலப்பொடி கடைகளில் ஏராளமான பெண்கள் கோலப்பொடிகளை வாங்கி சென்றனர். திருப்புத்துார் குறிஞ்சிநகரைச் சேர்ந்த பெண்கள் வண்ணக்கோலப்பொடி விற்பனை செய்கின்றனர்.ரசாயன கலவை கலந்து 32 வகையான வண்ணங்களில் கோலப் பொடியை 'கலர் கலராக' விற்கின்றனர். ரூ.10, ரூ.5 வீதம் பாக்கெட்களில் விற்கின்றனர். கால்படி ரூ.15க்கும் உதிரியாக விற்கின்றனர்.விற்பனையாளர் சகாயராணி கூறுகையில், 'முன்பு ஆற்றுமணலை சலித்து வண்ணத்தை கலந்து விற்றோம். அப்போது உழைப்பு மட்டுமே முதலீடாக இருந்தது. தற்போது மணலை விலைக்கு வாங்கி ரசாயன வண்ணம் சேர்த்து விற்கிறோம். இதனால் ஆண்டுக்கு ஆண்டு விலை உயர்கிறது. ஆனால் வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. கோலிமிடுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை