உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் துாய்மை பணியாளர்கள் போராட்டம்

காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் துாய்மை பணியாளர்கள் போராட்டம்

காரைக்குடி : காரைக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்குடி நகராட்சி, கோட்டையூர், கண்டனுார் பேரூராட்சிகள், சங்கராபுரம், இலுப்பக்குடி, அரியக்குடி, கோவிலுார், மானகிரி ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்பட்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மாநகராட்சியில் 300க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை ஏ.ஐ.டி.யூ.சி., சார்பில் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் வேறுபாடின்றி மாநகராட்சி ஊதியமான ரூ.19 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் பணியாளர்களை சமாதானம் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி