பள்ளி கட்டடம் திறப்பு
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள தீத்தான்பேட்டை அரசு துவக்கப்பள்ளி கட்டடம் சேதமடைந்ததை தொடர்ந்து 2 வருடங்களுக்கு முன்பு ரூ.29 லட்சம் செலவில் புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.2 வருடங்களாக அந்த புதிய கட்டடம் பல்வேறு காரணங்களால் திறக்கப்படாமல் இருந்ததால் மாணவர்கள் அருகில் உள்ள சமுதாயக்கூடத்தில் போதிய வசதி இல்லாமல் அவதிக்குள்ளாகி வருவதாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதனைத் தொடர்ந்து நேற்று புதிய பள்ளி கட்டடத்தை எம்.எல்.ஏ., தமிழரசி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.