மேலும் செய்திகள்
பள்ளிகளில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்
06-Sep-2024
சிவகங்கை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில எஸ்.ஜி.எப்.ஐ., கராத்தே மாணவர்கள் தேர்வு அமராவதிப்புதுார் ராஜராஜன் பொறியியல் கல்லுாரியில் நடந்தது. போட்டியில் மாநில அளவில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, மெட்ரிக்குலேஷன்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். சிவகங்கை மாவட்டம் சார்பில் 21ஆம் நுாற்றாண்டு சர்வதேச பதின்ம மேல்நிலைப் பள்ளி மாணவன் சுஜன்சிங் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் முதலிடம் பிடித்து தேசிய கராத்தே போட்டிக்கு தேர்வு பெற்றுஉள்ளார். மாணவரை பள்ளி நிறுவனர் சுதர்சன நாச்சியப்பன், அறங்காவலர் ராணி சத்தியமூர்த்தி, முதன்மை முதல்வர் விவேகானந்தன், முதல்வர் சங்கீதா, துணை முதல்வர்கள் அருணா தேவி, கனி, தலைமை ஆசிரியர் சாரதா உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.
06-Sep-2024