உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் சேர்ப்பு, நீக்க சிறப்பு முகாம் 

ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் சேர்ப்பு, நீக்க சிறப்பு முகாம் 

சிவகங்கை; மாவட்ட அளவில் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மேற்கொள்ள இன்றும், நாளையும் அந்தந்த ஓட்டுச் சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.வாக்காளர் பட்டியலில் திருத்தம், பெயர் மாற்றம், சேர்த்தல் செய்ய விரும்பும் வாக்காளர்கள் இந்த முகாமில் பயன் பெறலாம். இது தவிர https://elections.tn.gov.inமற்றும் https://voters.eci.gov.inஇணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ