லாரிகள் வேலைநிறுத்தம்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மாவட்டம் முழுவதிலும் வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அப்துல்கலாம் லாரி உரிமையாளர்கள் நலச்சங்க மாவட்ட செயலாளர் கண்ணப்பன் கூறுகையில், நேற்று முதல் கிரஷர்களில் எம்.சான்ட், பி.சான்ட், ஜல்லி போன்ற பொருட்கள் விலை ஏற்றப்பட்டுள்ளது. இவற்றின் விலைகளை குறைக்க வலியுறுத்தியும், கிரஷரில் ஏற்றும் பொருட்களுக்கு டிரான்சிட் பாஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் மாவட்டம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் காலைவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.