உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலை கட்டுமான பணிக்கு கடும் எதிர்ப்பு

மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலை கட்டுமான பணிக்கு கடும் எதிர்ப்பு

மானாமதுரை: மானாமதுரை சிப்காட் துளிப்பேட்டை வளாகத்தில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை கட்டுமானப் பணிகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கான கட்டுமான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இதற்கு மானாமதுரையை சேர்ந்த அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் இந்த ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து முந்தைய கலெக்டர் ஆஷா அஜித் கட்டுமான பணிக்கு தற்காலிக தடை விதித்திருந்தார். ஆனால் இந்த தடையை மீறி கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக மார்க்சிஸ்ட் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை கண்டித்து கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி