உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாணவர் அறிமுக விழா

மாணவர் அறிமுக விழா

திருப்புத்துார்:திருமயம் லேனாவிலக்கு மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு பொறியியல் மற்றும் முதுநிலை வணிக நிர்வாக மாணவர்களுக்கான மாணவர் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. மவுண்ட் சீயோன் கல்வி நிறுவன தலைவர் பிளாரன்ஸ் ஜெயபாரதன் தலைமை வகித்தார். இயக்குநர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபாரதன் வரவேற்றார். கோழிக்கோடு தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் மாணவர் மற்றும் நிறுவன உறவுகளுக்கான முதன்மையர் குமாரவேல் துவக்கவுரையாற்றினார். முதல்வர் பாலமுருகன் கல்விசார் நடைமுறைகள் குறித்து பேசினார். ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விவியன் ஜெயசன், கல்வி முதன்மையர் ஸ்ரீநிவாசன் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தினர். தகவல் மற்றும் தொடர்புத் தொழில்நுட்ப முதன்மையர் ராபின்சன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ