துாக்கிட்டு தற்கொலை
தேவகோட்டை; தேவகோட்டை காமாட்சி அம்மன் நகரில் வசித்து வருபவர் ஆரோக்கியசாமி. 58., சொந்த ஊர் தேனி மாவட்டம் சின்னமனுார். தாழையூர் ரோட்டில் மற்றொரு வீடு, பொருட்கள் வைக்கும் கிடங்கு உள்ளது. ஆழ்துளை கிணறு தோண்டும் கனரக இயந்திரங்கள் வைத்து சில ஆண்டுகளாக தேவகோட்டை தாலுகாவில் தொழில் செய்து வந்தார். இவர் நோயால் அவதிப்பட்டார். தாழையூர் ரோடு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.