மேலும் செய்திகள்
இடிந்து கிடக்கும் ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதி
05-Sep-2024
காரைக்குடி: சாக்கோட்டை அருகே தனியார் பள்ளி வேன் மின்கம்பத்தில் மோதியது. மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினர். காரைக்குடி சி.பி.எஸ்.இ., பள்ளி வேன் ஒன்று நேற்று மாலை, பள்ளிமாணவர்களை ஏற்றிக்கொண்டு சாக்கோட்டை பகுதிக்கு சென்றது. காரைக்குடியைச் சேர்ந்த டிரைவர் ரெக்ஸ் வாகனத்தை ஓட்டிச் சென்றார். புதுவயல், மணக்குடி, ஆம்பக்குடியில் மாணவர்களை இறக்கிவிட்டு வேலங்குடி விலக்கு அருகே வேன் சென்றபோது நிலை தடுமாறி மின்கம்பத்தில் மோதியது. இதில், மின் கம்பம் இரண்டாக முறிந்ததோடு வேன் பள்ளத்தில் இறங்கியது.விபத்தில் சிக்கிய மாணவ மாணவிகள் அச்சத்தில் அலறினர். அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் கிராம மக்கள் வேனில் இருந்து மாணவர்களை மீட்டனர். இதில், 10-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் காயமடைந்தனர். மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மின்கம்பத்தில் மோதிய நிலையிலும் பெரும் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சாக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
05-Sep-2024