உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  தேவகோட்டை மணிமுத்தாறில் தீர்த்தவாரி

 தேவகோட்டை மணிமுத்தாறில் தீர்த்தவாரி

தேவகோட்டை: தேவகோட்டையில் ஐப்பசி மாத பிறப்பு, கடைசி நாளில் தீர்த்தவாரி உற்ஸவம் நடைபெறும். அந்த வகையில் நேற்று ஐப்பசி கடைசி நாளை முன்னிட்டு சிலம்பணி சிதம்பர விநாயகர், கைலாச விநாயகர், மந்திரமூர்த்தி விநாயகர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், நித்திய கல்யாணி கைலாசநாதர், கோதண்டராமர், ரங்கநாத பெருமாள், கிருஷ்ணன் கோயில்களில் இருந்தும், நயினார் வயல் அகத்தீஸ்வரர் கோயிலில் இருந்தும் உற்ஸவ மூர்த்திகள் புறப்பாடாகி, மணி முத்தாறு ஆற்றில் எழுந்தருளினர். சிவ கோயில்களில் இருந்து ஹட் சரத்தேவர், வைணவ கோயிலில் இருந்து சக்கரத்தாழ்வாருக்கு குடமுழுக்கு அபிேஷகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ