உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துார் - சிவகங்கை போதிய பஸ் வசதி இல்லை

திருப்புத்துார் - சிவகங்கை போதிய பஸ் வசதி இல்லை

பயணிகள் கோரிக்கைதிருப்புத்துார்: திருப்புத்துாரிலிருந்து சிவகங்கைக்கு பகல் முழுவதும் குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் இரவு நேரத்தில் சில பஸ்கள் மட்டுமே உள்ளன. குறிப்பாக இரவு 8:20 மணிக்கு மேல் ஒரு மணி நேரம் சிவகங்கைக்கு பஸ் இல்லை. முன்பு 8:40 மணிக்கு சிவகங்கை சென்ற அரசு பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் இரவு நேரத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதைத் தவிர்க்க மீண்டும் 8:45 மணி அளவில் சிவகங்கை செல்ல பஸ்சை இயக்க பயணிகள் கோரியுள்ளனர். சிவகங்கை மட்டுமின்றி இடையிலுள்ள ஊர்களான திருக்கோஷ்டியூர், அரளிக்கோட்டை, மதகுபட்டி பயணிகளுக்கும் உதவிகரமாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி