உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டயர் வெடித்ததில் லாரி கவிழ்ந்தது

டயர் வெடித்ததில் லாரி கவிழ்ந்தது

திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே மதுரை ரோட்டில் டயர் வெடித்து சரக்குடன் வந்த லாரி கவிழ்ந்து விழுந்தது.தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவன லாரி நேற்று காலை மளிகை பொருட்கள் உள்ளிட்ட சரக்குகளுடன் மதுரையிலிருந்து அறந்தாங்கிக்கு சென்றது. திருப்புத்துார் மதுரை ரோட்டில் கருப்பூர் அருகே வந்த போது லாரியின் முன்பக்க டயர் வெடித்தது. அதில் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி ரோட்டோர பாலத்தடுப்புச்சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்து விழுந்தது. டிரைவர் காரைக்குடி கழனிவாசலை சேர்ந்த மணி54, காயமடைந்தார்.காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.மண் அள்ளும் இயந்திரம் மூலம் கவிழ்ந்த மினிலாரியில் உள்ள பொருட்கள் மீட்கப்பட்டு வேறு வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி