கீழடியில் அமைச்சர் ஆய்வு
கீழடி : கீழடி அருங்காட்சியகத்தை தமிழக சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு செய்தார்.பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஆறு கட்டட தொகுதிகளையும் பார்வையிட்ட அவர் சுற்றுலா பயணிகளின் பொழுது போக்கிற்காக கூடுதல் ஏற்பாடு, அருங்காட்சியகம் அருகே 125 ஏக்கர் பரப்பளவுள்ள கொந்தகை கண்மாயில் படகு இயக்க ஆய்வு செய்தார். பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருடத்தில் மூன்று மாதங்கள் மட்டுமே தண்ணீர் இருக்கும், தொடர்ச்சியாக நீர்வரத்திற்கு ஏற்பாடு செய்ய முடியாது. கண்மாயை நம்பி 2 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன. பாசன தேவைக்காக மட்டுமே கண்மாய் உள்ளது. படகு இயக்குவது சாத்தியமில்லாதது என தெரிவித்தனர்.