வாசகர்கள் கருத்துகள் ( 1 )
செட்டிநாட்டுக்காரனின் க றுத்து.... காரைக்குடி புதுவையில் சாலை ஒருசில இடங்களில் மிக மிக குருக்கலானது. சுமார் முப்பது ஆடி மட்டும் உள்ளது. ஒரே தீர்வு. புது வாயால் ப்யபாஸ் சாலை அமைப்பது மட்டும்தான்
காரைக்குடி : புதுவயல் பேரூராட்சியில் உள்ள குறுகிய சாலைகளால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு சரக்கு வாகனங்கள் நீண்ட நேரம் தவிக்கும் அவலம் நிலவி வருகிறது.புதுவயல் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். சாக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட 150க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் புதுவயலுக்கு தினசரி வேலை நிமித்தமாகவும், வணிக ரீதியாகவும் வந்து செல்கின்றனர்.மேலும் புதுவயல் பகுதியில் உள்ள அரிசி ஆலைகளுக்கு தினமும் ஏராளமான சரக்கு லாரிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் வந்து செல்கின்றன. அறந்தாங்கி பட்டுக்கோட்டை செல்லும் முக்கிய சாலையாக காரைக்குடி புதுவயல் சாலை உள்ளது. இந்த சாலை குறுகிய சாலையாக உள்ளது. அரிசி ஆலைகளுக்கு செல்லும் பெரிய லாரிகள் குறுகிய வளைவுகளில் திரும்பும் போதும் மற்றொரு கனரக வாகனங்கள் வரும்போதும் இரண்டு வாகனங்களும் செல்ல முடியாமல் சிக்கி நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
செட்டிநாட்டுக்காரனின் க றுத்து.... காரைக்குடி புதுவையில் சாலை ஒருசில இடங்களில் மிக மிக குருக்கலானது. சுமார் முப்பது ஆடி மட்டும் உள்ளது. ஒரே தீர்வு. புது வாயால் ப்யபாஸ் சாலை அமைப்பது மட்டும்தான்