மேலும் செய்திகள்
இளையாத்தங்குடியில் தேரோட்டம்
10-Jan-2025
கம்பம் அங்காளம்மன் கோயிலில் கலச பூஜை
19-Jan-2025
கண்டவராயன்பட்டி: திருப்புத்துார் ஒன்றியம் வேலங்குடி சாம்பிராணிவாசகர் உறங்காப்புளி கருப்பர் கோயில் மாசித் திருவிழா பிப்.23 ல் துவங்குகிறது. இக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு மாசித் திருவிழா நடைபெறும். பிப்.23 இரவில் காப்புக் கட்டி திருவிழா துவங்குகிறது.தொடர்ந்து மறுநாள் கப்பரையை முன்னிட்டு அங்காளம்மன் கோயிலிருந்து வீரபத்திரர் சுவாமி அழைத்து கருப்பர் கோயிலுக்கு வருவர். தொடர்ந்து பக்தர்கள் கருப்பருக்கு விரதம் துவக்குவர். பிப். 26ல் சிவராத்திரியை முன்னிட்டு அங்காளம்மனுக்கு அபிஷேகம் நடைபெறும்.தொடர்ந்து கிராமத்தினர் கருப்பர் கோயில் வந்து சிறப்பு வழிபாடு நடைபெறும். மறுநாள் பாரிவேட்டையை முன்னிட்டு அங்காளம்மன் சிங்க வாகனப் புறப்பாடும், கிராமத்தினர் ஆடல், பாடலுடன் வான வேடிக்கை கொண்டாட்டம் நடைபெறும்.தொடர்ந்து மார்ச் 1ல் முதல் நாள் திருவிழாவை முன்னிட்டு சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து சாமியாடிகள் கோயிலுக்கு வருகையும், உற்ஸவ அம்மன் பச்சை வாழைக் குடிலில் எழுந்தருளலும் நடைபெறும். மறுநாள் இரண்டாம் திருவிழாவிழாவில் கிராமத்தினர் சுவாமிக்கு அரிவாள் படைத்தல், முடி காணிக்கை, கரும்பு தொட்டில் கட்டுதல் என்று நேர்த்திக்கடன் நிறைவேற்றுதலும், அன்னதான பெருவிழாவும், இரவில் சாமியாட்டமும் நடைபெறும்.பிப்.3 ல் மூன்றாம் திருவிழாவும், பிப். 4ல் மஞ்சள் நீராட்டு விழாவில் கருப்பன்பட்டியில் மஞ்சு அரிவாளில் சாமியாட்டம் நடைபெற்று தொடர்ந்து கருப்பர் கோயில் வந்து சாமியாட்டம் நடைபெற்று விழா நிறைவடையும்.
10-Jan-2025
19-Jan-2025