உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கிருதுமால் நதியில் நுரையாக பொங்கி வரும் கழிவு நீர்

கிருதுமால் நதியில் நுரையாக பொங்கி வரும் கழிவு நீர்

கீழடி:கீழடி அருகே கிருதுமால் நதியில் நுரையுடன் வந்த கழிவு நீரால் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர். நாகமலை புதுக்கோட்டையில் இருந்து வரும் கிருதுமால் நதி மதுரை நகர் வழியாக புலியூர், சயனாபுரம், பாட்டம், பொட்டப்பாளையம் வழியாக கமுதி அருகே மண்டலமாணிக்கம் குண்டாற்றில் கலக்கிறது. கிருதுமால் நதியை நம்பியே திருப்புவனம் வட்டாரத்தில் உள்ள பத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசனம் மற்றும் குடி நீர் தேவைகள் பூர்த்தியாகின்றன. சிவகங்கை மாவட்ட எல்லையான புலியூர், சயனாபுரம், பாட்டம், பொட்டப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நவீன அரிசி ஆலைகள், சாயப்பட்டறைகள், பருப்பு மில்கள், கெமிக்கல் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் கழிவு நீரை சுத்திகரிக்காமல் அப்படியே கிருதுமால் நதியில் திறந்த விடுகின்றனர். பொட்டப்பாளையம் பாலத்தின் கீழே கழிவு நீரில் இருந்து நுரை பொங்கி ரோட்டில் பறந்து செல்கிறது.வருடக்கணக்கில் கழிவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆழ்துளை கிணறுகள், திறந்த வெளி கிணறுகளில் தண்ணீர் கருப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன் வருகிறது. இப்பகுதி கிராமமக்கள் அனைத்து தேவைகளுக்கும் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். கிருதுமால் நதியில் நுரையுடன் தண்ணீர் வருவதால் ஆடு, மாடுகள்கூட குடிக்க முடிவதில்லை, பொதுமக்களும் பயன்படுத்த முடியாவண்ணம் உள்ளது. கிருதுமால் நதியில் தொழிற்சாலைகளின் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் திறந்த விடப்படுவது குறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ