உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / போதையில் தகராறு தொழிலாளிக்கு வெட்டு

போதையில் தகராறு தொழிலாளிக்கு வெட்டு

சிவகங்கை: சிவகங்கை முடிகண்டம் பகுதியை சேர்ந்தவர் பாலகுமார் 50, ஜெயக் குமார் 50. இருவரும் சிவகங்கை அருகே மேலுார் ரோட்டில் உள்ள பச்சேரி முத்துராமன் தோப்பில் கூலி வேலை பார்த்து வருகின்றனர். நவ.6 இரவு 7:00 மணிக்கு இருவரும் தோப்பில் அமர்ந்து மது அருந்தி யுள்ளனர். அப்போது போதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஜெயக்குமார் அரிவாளால் பாலகுமாரை தலை, கையில் வெட்டி கொலை மிரட்டல் விடுத்து தப்பினார். அருகில் இருந்தவர்கள் பாலகுமாரை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி