உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இளம் சாதனையாளர் உதவித்தொகை விண்ணப்பம் 

இளம் சாதனையாளர் உதவித்தொகை விண்ணப்பம் 

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட அளவில் பிற்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய, சீர்மரபினர் பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விதமாக பிரதம மந்திரியின் கல்வி உதவி தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தேசிய கல்வி உதவித்தொகையானது பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் படிக்கும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படும். இதில் விண்ணப்பிக்கும் மாணவரின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2.5லட்சத்திற்குள் இருத்தல் வேண்டும். அதே நேரம் கடந்த கல்வி ஆண்டில் கல்வி உதவி தொகை பெற்ற மாணவர்கள் ''https://scholarships.gov.in'' என்ற தேசிய கல்வி உதவி தொகை இணையதளத்தில் புதுப்பிக்கப்பட்ட விண்ணப்பம், ஓ.டி.ஆர்., எண் மூலம் பதிவு செய்து, புதுப்பிக்கலாம். நடப்பாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்புவோர் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் இணைதளத்தில் அலைபேசி எண், ஆதார் விபரங்களை உள்ளீடு செய்து, பாஸ்வேர்ட் பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவு எண்ணை கொண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம். பட்டியலிடப்பட்ட பள்ளிகள் விபரங்களை ''https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm'' என்ற இணையதளத்தில் பார்க்கலாம். மாணவர்கள் அக்., 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அவற்றை சரிபார்த்து அக்., 31 க்குள் மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை