உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இளைஞர் திறன் திருவிழா

இளைஞர் திறன் திருவிழா

காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள கிட் அண்ட் கிம் கல்லுாரியில் இளைஞர் திறன் திருவிழா நடந்தது.தமிழ்நாடு மாநில ஊடக வாழ்வாதார இயக்கம் மற்றும் தீன் தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் நடந்த நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் தேன்ராஜ் வரவேற்றார்.இதில் மாணவர்களுக்கு எண்ணற்ற தொழில் பயிற்சி அளிக்கப்படுவதோடு மூன்று மாத பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சிக்கு தேர்வான மாணவர்களை முதல்வர் மயில்வாகனன் வாழ்த்தினார். உதவி திட்ட அலுவலர் ஜோ மரியா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர்கள் வட்டார இயக்க மேலாளர்கள் ஒருங்கிணைப்பாளர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ