உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / தென்காசி கோயில் கும்பாபிஷேகம் தள்ளிப்போகிறது

தென்காசி கோயில் கும்பாபிஷேகம் தள்ளிப்போகிறது

தென்காசி:தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோயில் திருப்பணிகள் நிறைவடையாததால் ஏப்ரல் 7ல் நடத்த திட்டமிடப்பட்ட கும்பாபிஷேகம் தள்ளிப்போகிறது.தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் ஏற்கனவே 1990, 2006 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. தற்போது பல கோடி ரூபாய் மதிப்பில் ராஜகோபுரம் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்து வருகிறது. ஏப்ரல் 7ல் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.நேற்று முன்தினம் ஆய்வுக்கு வந்த ஹிந்து அறநிலையத்துறை துணை ஆணையர் பழனியிடம் திருப்பணிகள் இன்னும் நிறைவு பெறாததால் அவசரமாக கும்பாபிஷேகம் நடத்த வேண்டாம் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். திருப்பணிகள் நிறைவடைய சில மாதங்கள் ஆகலாம் என்பதால் கும்பாபிஷேக தேதி தள்ளிப்போகலாம் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ