உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / கூட்டுறவு ஊழியர் சங்கம் உண்ணாவிரதப் போராட்டம்

கூட்டுறவு ஊழியர் சங்கம் உண்ணாவிரதப் போராட்டம்

தஞ்சாவூர்: தஞ்சையில் 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். தஞ்சை கலெக்டர் அலுவலகம் பனகல் கட்டிடம் முன், மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது. உண்ணாவிரதத்துக்கு மாவட்ட பொது செயலாளர் ராஜாராமன் தலைமை வகித்தார். கூட்டுறவு ஊழியர் சங்க நிர்வாகிகள் பாஸ்கர், தெய்வநாயகம், மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைசெயலாளர் குணசேகரன், பொருளாளர் ரமேஷ் உட்பட பல்வேறு தொழிற் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் மனோகரன் உண்ணாவிரத்தை துவக்கி வைத்தார். தஞ்சை மாவட்டம் பனையக்கோட்டை ரப்பர் பால் கூட்டுறவு தொழிற் சாலை மற்றும் தமிழ்நாடு மத்திய கூட்டுறவு கயிறு தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்தும், 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ