மேலும் செய்திகள்
தீபாவளி சீட்டு மோசடி தஞ்சையில் 2 பேர் கைது
03-Aug-2025
தஞ்சாவூர்; தஞ்சாவூரில் வீடு ஒன்றில் பதுங்கியிருந்து பிடிக்கப்பட்ட கண்ணாடி விரியன் பாம்பு, 22 குட்டிகளை ஈன்றது. தஞ்சாவூர், சுந்தரம் நகரில், வீடு ஒன்றில் பாம்பு பதுங்கி இருப்பதாக அருங்கானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை குழுவினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அதன் நிர்வாகி சதீஷ்குமார் மற்றும் அவரது குழுவினர், அங்கு சென்று, 3 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு இருப்பதை உறுதி செய்தனர். அதை உயிருடன் மீட்டு காப்பகத்துக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து, அந்த பாம்பை பரிசோதனை செய்த போது, பாம்பு கருவுற்ற நிலையில் இருந்தது. பாம்பு காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட சூழலில், நேற்று முன்தினம், 22 தோல் முட்டைகள் பாம்பு உடலில் இருந்து வெளியாகி, சிறிது நேரத்தில், 22 பாம்பு குட்டிகள் வெளியே வந்தன. இதுகுறித்து, தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் ஆனந்தகுமாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவரின் அறிவுறுத்தல் படி, பாம்பு, 22 குட்டிகள் பாதுகாப்பாக வனப்பகுதியில் விடப்பட்டன.
03-Aug-2025