உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / பட்டா மாற்றத்திற்கு லஞ்சம்  ஊர்க்காவல் பெண் கைது 

பட்டா மாற்றத்திற்கு லஞ்சம்  ஊர்க்காவல் பெண் கைது 

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் தாலுகா பகுதியை சேர்ந்த அம்மங்குடி கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன். இவரது நிலம் தோப்புவிடுதி கிராமத்தில் உள்ளது. கூட்டுபட்டாவில் உள்ள நிலத்திற்கு உட்பிரிவு செய்து தனிபட்டா பெற, தோப்புவிடுதி வி.ஏ.ஓ.,வான புதுக்கோட்டை மாவட்டம் மட்டங்கால் பகுதியை சேர்ந்த முருகேசன், 32, என்பவரை அணுகினார்.அப்போது, முருகேசன் 5,000 லஞ்சம் கேட்டார். மேலும், பணத்தை திருவோணம் தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள இ - சேவை மையம் நடத்தி வரும் ஊர்க்காவல் படையில் பணியாற்றும் சுதா என்பவரிடம் கொடுக்க கூறினார்.இந்நிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத குமரேசன், தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் அறிவுறுத்தலின்படி, சுதா நடத்தி வரும் இ - சேவை மையத்திற்கு வந்த குமரேசன், பணத்தை சுதாவிடம் கொடுத்தார்.மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், வி.ஏ.ஓ., முருகேசன், சுதாவை கையும் களவுமாக பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை