உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / முதல்வரை பார்க்க அனுமதி மறுப்பு; மகாமக குளத்தில் மனுக்கள் வீச்சு

முதல்வரை பார்க்க அனுமதி மறுப்பு; மகாமக குளத்தில் மனுக்கள் வீச்சு

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கும்பகோணத்தை பிரித்து, தனி வருவாய் மாவட்டமாக அரசு அறிவிக்க, மக்கள் 25 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்த, 100 நாட்களுக்குள் கும்பகோணம் மாவட்டம் அறிவிக்கப்படும்' என, தேர்தல் பிரசாரத்தில், முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், நான்கு ஆண்டாகியும் அறிவிப்பு வெளியாகவில்லை.தஞ்சாவூர் வந்த முதல்வரை சந்தித்து, கும்பகோணம் தனி மாவட்டம் தொடர்பாக கோரிக்கை மனு அளிக்க அனுமதி கேட்ட போது, மறுக்கப்பட்டது. இதையடுத்து, கும்பகோணம் மாவட்டம் கோரும் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின் தலைமையில், பா.ஜ., - த.மா.கா., - பா.ம.க., நாம் தமிழர், ஹிந்து மக்கள் கட்சி, தே.மு.தி.க., வணிகர்கள் என பல்வேறு அமைப்பினர், முதல்வரிடம் வழங்க வைத்திருந்த கோரிக்கை மனுவை, நேற்று காலை மகாமக குளத்தில் வீசி நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kulandai kannan
ஜூன் 18, 2025 14:19

30ஆக இருந்த மாவட்டங்களை, 38 ஆகப் பிரித்தது இபிஸ்ஸுக்கும் பலனில்லை, மக்களுக்கும் பலனில்லை.


c.mohanraj raj
ஜூன் 18, 2025 10:33

இன்னும் முதலமைச்சர் மனு வாங்கி சரி செய்து விடுவார்கள் என்று நம்புகிறார்கள் இந்த மக்கள் பாவம் அதற்கு படிக்க தெரிய வேண்டுமே


அப்பாவி
ஜூன் 18, 2025 10:30

எதுக்கு குளத்தில் வீசி குளத்தை பாழ்பண்ணுறீங்க?