மேலும் செய்திகள்
இளைஞருக்கு 7 ஆண்டு சிறை
05-Mar-2026
டிரைவர், கண்டக்டர் தகுதி பெற்ற முதல் பெண்
03-Mar-2026 | 2
ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் தேரோட்டம்
01-Mar-2026
ஐம்பொன்னாலான 65 டன் ஆதிபராசக்தி சிலை
28-Feb-2026
தஞ்சாவூர்: திரு விடைமருதுார் அருகே மதமாற்றம் செய்த நபர்களை தடுத்து, அதை 'வீடியோ'வாக வெளியிட்ட, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகியை போலீசார் நேற்று கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார், திருநறையூர் வள்ளுவர் தெருவில், நேற்று முன்தினம் ஒன்பது பேர் கும்பல், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று, கிறிஸ்துவ மத பிரசாரம் செய்து புத்தகங்களை வழங்கி, சர்ச்சுக்கு வரவழைத்து, மத பிரசாரம் செய் து கொண்டு இருந்தனர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து அறிந்த திருந றையூரை சேர்ந்த ஆதித்யன், 30, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மக்கள் தொடர்பாளர், மதமாற்றம் செய்த நபர்களை தடுத்து நிறுத்தி, சரமாரியாக கேள்வி கேட்டு வீடியோவாக பதிவு செய்தார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில், ஆதித்யனை நேற்று போலீசார், கைது செய்தனர். தகவலறிந்த திருநறையூர் மக்கள், ஹிந்து அமைப்பினர் மற்றும் பா.ஜ.,வினர், திருவிடைமருதுார் டி.எஸ்.பி., அலுவலகம் முன் குவிந்தனர். இருப்பினும் நேற்று இரவு, கும்பகோணம் நீதிமன்றத்தில், ஆதித்யனை போலீசார் ஆஜர்படுத்தினர்.
05-Mar-2026
03-Mar-2026 | 2
01-Mar-2026
28-Feb-2026