உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / அணையில் திருடு போன ஷட்டர் திருகு : சொந்த செலவில் சீரமைத்த விவசாயிகள்

அணையில் திருடு போன ஷட்டர் திருகு : சொந்த செலவில் சீரமைத்த விவசாயிகள்

தஞ்சாவூர்::கச்சமங்கலம் அணையில் திருடு போன ஷட்டர் திருகுகளை, விவசாயிகள் சொந்த செலவில் பொருத்தியுள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டம், கச்சமங்கலம் அணையில் இருந்து வெண்ணாற்றின் கிளையாக ஆனந்தகாவேரி வாய்க்கால் மற்றும் அதன் கிளை வாய்க்கால்கள் வாயிலாக, 6,004 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.ஆனந்தகாவேரி வாய்க்கால் மற்றும் கிளை வாய்க்கால்களான சித்தாயல், புலிஅடி, மருதக்குடி, படுகை, மேட்டு வாய்க்கால்கள் என 15 இடங்களில் இரும்பு ஷட்டர் திருகுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து, நீர்வளத் துறை அலுவலர் அளித்த புகாரை, பூதலுார் போலீசார் பதிவு செய்யவில்லை.இருப்பினும், பூதலுார் அருகே மருதக்குடி வாய்க்கால் வாயிலாக, 300 ஏக்கர் பாசன வசதி பெறும் நிலையில், இரும்பு ஷட்டர் ராடு ஆகியவை இல்லாததால், தண்ணீர் வீணானது. அப்பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து, திருடப்பட்ட ஷட்டருக்கான இரும்பு ராடு, திருகுகளை, சொந்த செலவில் புதிதாக மாற்றி பாசனத்திற்கு நீரை பயன்படுத்தி வருகின்றனர்.பூதலுாரைச் சேர்ந்த விவசாயி சுந்தரவடிவேல் கூறுகையில், “திருடுபோன ஷட்டர்களை சீரமைக்க, நீர்வளத் துறையினர் அக்கறை காட்டவில்லை. திருட்டை கண்டுபிடிக்க போலீசாரும் அக்கறை காட்டவில்லை.''ஷட்டர் திருகுகள் இல்லாமல் தண்ணீர் வீணானதால் விவசாயிகள் ஒன்றிணைந்து, 7,500 ரூபாய் செலவில், ஷட்டருக்கான புதிய திருகு செய்து பொருத்தியுள்ளோம்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை