உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / அண்ணனை விடுவிக்க கோரி விஷம் குடித்த தங்கை பலி

அண்ணனை விடுவிக்க கோரி விஷம் குடித்த தங்கை பலி

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், நடுகாவேரி பகுதியை சேர்ந்தவர் அய்யாவு. இவரை அப்பகுதியை சேர்ந்த சிலர், மது விற்று தர கூறினர். இதையறிந்த அய்யாவு மகன் தினேஷ், 32, அந்த நபர்களை தாக்கினார். இதனால், நேற்று முன்தினம் அவரை, நடுகாவேரி போலீசார், கைது செய்தனர்.போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற தினேஷின் சகோதரிகளான மேனகா, 31, கீர்த்திகா, 29, தினேஷை வெளியே விட வேண்டும் என கூறினர். விட முடியாது என இன்ஸ்பெக்டர் கூறியதாக கூறப்படுகிறது. மேனகா, கீர்த்திகா இருவரும் போலீஸ் ஸ்டேஷன் முன் விஷம் குடித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கீர்த்திகா நேற்று காலை உயிரிழந்தார். மேனகா தொடர்ந்து சிகிச்சை பெறுகிறார். கீர்த்திகா உடலை வாங்க மறுத்து, அவரின் உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.எஸ்.பி., ராஜாராம் கூறுகையில், ''தினேஷ் மீது 13 வழக்குகள் உள்ளன. 2024ம் ஆண்டு மட்டும் நான்கு வழக்குகள் பதிவாகியுள்ளன. ஒவ்வொரு வழக்கில் கைது செய்ய போகும் போதும், அவரது தங்கைகள் விஷம் குடித்து விடுவதாக கூறுவது வழக்கம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Karuthu kirukkan
ஏப் 16, 2025 12:49

திராவிட 3C ஆட்சியில் காவல் துறை செயல்பாடுகள் collection, commission, corruption மேற்கொண்டு நடைபெறுவது இயல்பு , ஒரு பெண்ணின் வாழ்க்கையை சாதி வெறி ஒரு பெண் ஆய்வாளர் முடித்துவிட்டார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை