மேலும் செய்திகள்
சர்வே நடத்திய ஆளுங்கட்சி அதிர்ச்சி
12-Aug-2025
தஞ்சாவூர்:பஸ்சை தவற விட்டதால், பைக்கில் லிப்ட் கேட்டு சென்ற இளம் பெண், தனியார் பள்ளி வேன் மோதியதில் உயிரிழந்தார். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே, மன்னிக்கரையூரைச் சேர்ந்த ஷாலினி, 23. சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சில நாட்களுக்கு முன், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், நேற்று காலை, மீண்டும் சென்னை செல்ல கிளம்பினார். கும்பகோணம் செல்லும் பஸ் சென்று விட்டதால், புதுக்கண்டி படுகை கிராமத்தைச் சேர்ந்த விஜய் என்பவரின் பைக்கில் 'லிப்ட்' கேட்டு, ஏறிச் சென்றார். திருப்புறம்பியம் சாலையில் சென்றபோது, திருவைக்காவூருக்குச் சென்ற தனியார் பள்ளி வேன் பைக் மீது மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட ஷாலினி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். பைக் ஓட்டிச் சென்ற விஜய், பயத்தில் அங்கிருந்து தப்பினார். கபிஸ்தலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
12-Aug-2025