உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / பெண்ணுக்கு தொல்லை வாலிபர் கைது

பெண்ணுக்கு தொல்லை வாலிபர் கைது

தஞ்சாவூர்:கபிஸ்தலம் அருகே, மாற்றுத்திறனாளி இளம்பெண்ணுக்கு, பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை, போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் அருகே, ஆதனுார் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், 31, ஜூலை, 22ல் பக்கத்து கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த, 20 வயது மாற்றத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த பெண் அளித்த புகார்படி, கபிஸ்தலம் போலீசார், வழக்குபதிந்து நேற்று மணிகண்டனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி