விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேனி, ஆக.6–தேனி கம்மவார் சங்கம் கலை, அறிவியல் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் வெற்றிவேல் தலைமை வகித்தார். கல்லுாரி செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். தேனி மதுவிலக்கு டி.எஸ்.பி., சீராளன், போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் உடல், மன நல பிரச்னைகள், குடும்ப,சமூக பாதிப்புகள் பற்றி விளக்கினார். முதலாமாண்டு மாணவர்கள் பங்கேற்று போதை பொருட்கள் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்றனர்.