உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரூ.100 நோட்டு கட்டுக்கு கிராக்கி

ரூ.100 நோட்டு கட்டுக்கு கிராக்கி

பெரியகுளம்: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வங்கிகளில் ரூ.100 நோட்டுக்கு கிராக்கி ஏற்பட்டு வருகிறது.தேனி லோக்சபா தேர்தல் ஏப்.19ல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே உள்ளன.பெரியகுளம் பகுதி வங்கிகளில் சில தினங்களாக ரூ.100 கட்டுவாங்குவது அதிகரித்துள்ளது.இதேபோல் ஏ.டி.எம்., மையங்களில் ரூ.500, ரூ.200, ரூ.100 நோட்டுகள் நிரப்பப்படும். தற்போது இதில் ரூ.100 அதிக அளவில் எடுக்கப்பட்டு வருகிறது. ரூ. 2 ஆயிரத்திற்கு ரூ. 500 நோட்டு 4 எண்ணிக்கை, அதே நேரத்தில் ரூ.100 நோட்டு 20 எண்ணிக்கை அதிக அளவில்இருப்பதால் வெயிட்டாக இருக்கும்.இதனால் ரூ.100 நோட்டுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து வங்கி மேலாளர் ஒருவர் கூறுகையில்: முந்தைய காலங்களில் ரூ.100 நோட்டு கட்டு பெரும்பாலும் வாங்க மறுப்பர். தற்போது ரூ.100 கட்டுகளை அதிக அளவில் கேட்டு வாங்குகின்றனர் என்றார்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ