ஆர்ப்பாட்டம் செய்த தி.மு.க.வினர் கைது
தேனி, ஜூன் 30– தமிழக மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய கோரி மாநிலம் முழுவதும் தி.மு.க., மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பழனிசெட்டிபட்டியில் பெரியகுளம் முன்னாள் எம்.எல்.ஏ., சரவணக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க., கவுன்சிலர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்ட நடத்தியதாக பழனிசெட்டிபட்டி போலீசார் முன்னாள் எம்.எல்.ஏ., சரவணக்குமார் உள்பட தி.மு.க., நிர்வாகிகள் 60 பேரை கைது செய்தனர்.