மரத்தில் இருந்து விழுந்தவர் பலி
ஆண்டிபட்டி, ஏப்.30- ஆண்டிபட்டி அருகே டி.ராஜகோபாலன்பட்டியை சேர்ந்த விவசாயி குருசாமி 61. இவர் மூன்று நாட்களுக்கு முன்பு தனது தோட்டத்தில் இருந்த கொடிக்காய் மரத்தில் ஏறி காய் பறித்துள்ளார். எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். ் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.