உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தொழிற்கல்வி மாணவர்களுக்கு 10 நாட்கள் களப்பயிற்சி திட்டம்

தொழிற்கல்வி மாணவர்களுக்கு 10 நாட்கள் களப்பயிற்சி திட்டம்

தேனி: மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்விகள் படிக்கும் மாணவர்களுக்கு 10 நாட்கள் களப்பயிற்சி அளிக்க உள்ளதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர். மாவட்டத்தில் உள்ள 19 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 1,பிளஸ் 2 பாடப்பிரிவுகளில் தொழிற்கல்வி படிப்புகளான வேளாண், மெக்கானிக்கல், நர்சிங், அக்கவுண்டன்ட், எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த பாடப்பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு அக்.,6 முதல் 10 நாட்களுக்கு இன்டன்ஸிப் பயிற்சி எனப்படும் படிப்பு தொடர்பான களப்பயிற்சி வழங்கப்பட உள்ளது. மாணவர்களுக்கு பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி, வயல்வெளிகள், அரசு பஸ் டெப்போக்கள், தேக்கம்பட்டி அரசு பாலிடெக்னிக், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், தபால் அலுவலகங்கள், கணினி மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ