பன்முகத் தன்மையுள்ள மாணவர்களை உருவாக்கும் பள்ளி
க ம்பம் ராம் ஜெயம் வித்யா மத்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தொடர்ந்து அரசு பொதுத்தேர்வுகளில் நூறு சதவீத தேர்ச்சி மற்றும் மாநில, மாவட்ட அளவில் ரேங்கிங் பெற்று வருகிறது. அன்றாடம் நடத்தும் பாடங்களை அன்றே திருப்புதல் தேர்வு நடத்தி மாணவர்களை அதிக மதிப்பெண் பெற பயிற்சி வழங்கப்படுகிறது. அனுபவமிக்க, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மேல்நிலை, உயர்நிலை என தனித் தனி முதல்வர்கள், ஸ்கேட்டிங், யோகா, கராத்தே, நடனம், சிலம்பம், கம்யூனிகேசன், என பல்வேறு கலைகள் பயிற்றுவிக்கப்படுகிறது. பரந்து விரிந்த விளையாட்டு மைதானங்கள், உள் விளையாட்டு அரங்கு, ஸ்மார்ட் வகுப்பறைகள், கேன்டீன் வசதி என அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் கொண்டது. கிளீன் காம்பஸ் மட்டுமல்லாமல் கிரீன் காம்பஸ்சாகவும் மாற்றியுள்ளனர் இப்பள்ளி நிர்வாகத்தினர். ஒவ்வொரு மாணவரையும் தனித் தனியாக கவனித்து கல்வி கற்பிக்கப்படுகிறது. ஒழுக்கம், நேர்மை, கீழ் படிதல், பொய் பேசாமை அறிவுறுத்தி போதிக்கின்றனர். நிர்வாக தலைவர் சவுந்தரராசன், தாளாளர் கவிதா, முதுநிலை முதல்வர் சுவாதிகா ஆகியோர் மேற்பார்வையில் மாணவர்கள் இப்பள்ளியில் கல்வியை முடித்து வெளியேறும்போது பன்முகத் தன்மை கொண்டவர்களாக செல்கின்றனர்.