மாணவர்களுக்கு பாராட்டு விழா
தேனி: பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்டரங்கில் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. சி.இ.ஓ., நாகேந்திரன் தலைமை வகித்தார். ஒருங்கிணைந்த பள்ளிகல்வி உதவி திட்ட அலுவலர் மோகன் முன்னிலை வகித்தார். மாநில அளவில் மாவட்டத்தை சேர்ந்த அரசு, உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 6 பேர் முதலிடம், 4 பேர் இரண்டாம் இடம், 3 பேர் மூன்றாம் இடம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளிதலைமை ஆசிரியர்கள் விழாவில் பங்கேற்றனர்.