பைபாசில் வரும் ஐயப்ப பக்தர்கள் வாகன வேகத்தை குறைக்க வேண்டும்
கம்பம்: பைபாஸ் ரோடுகளில் வரும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தி செல்ல போலீசார் அறிவுறுத்த வேண்டும். சபரிமலை ஐயப்பன் கோயிலிற்கு ஆண்டுதோறும் மண்டல பூஜை மகரவிளக்கு சீசனில் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரள்வார்கள். இந்தாண்டு கார்த்திகை முதல் நாளில் இருந்தே கூட்டம் அதிகளவில் உள்ளது. தினமும் பல ஆயிரம் பேர் தரிசனம் செய்கின்றனர். பெரும்பாலான பக்தர்கள் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து வருகின்றனர். நீண்ட தூரங்களில் இருந்து வருவதால், புதிதாக போடப்பட்டுள்ள பைபாஸ் ரோடுகளில் அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்துகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இரவு, பகலாக வாகனங்களை செலுத்துபவர்களுக்கு பைபாஸ் ரோடுகளில் உள்ள குறுக்கு ரோடுகளை பற்றி தெரியாது. குறுக்கு ரோடுகளில் இருந்து பைபாஸ் ரோட்டை கிராஸ் செய்யும் போது விபத்துகள் ஏற்படும். எனவே வெளிமாநில வாகனங்களை போலீசார் நிறுத்தி வேகத்தை குறைத்து செல்ல அறிவுறுத்த வேண்டும். தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, பெரியகுளம், தேனி, வீரபாண்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் பைபாஸ் ரோடுகளில் போலீசார் இந்த பணி மேற்கொள்ள வேண்டும். அதேபோன்று கோயிலிலிருந்து திரும்பி வரும் வாகனங்களை குமுளி அரசு போக்குவரத்து கழக பனிமனை அருகே நிறுத்தி மலைப்பாதை, வேகம் குறைத்து செல்ல அறிவுறுத்த வேண்டும். தேனி எஸ்.பி. ஸ்னேஹா ப்ரியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.