உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பா.ஜ., ஆர்ப்பாட்டம்

 பா.ஜ., ஆர்ப்பாட்டம்

பெரியகுளம்: பெரியகுளம் அருகே தாமரைக்குளம் கரட்டில் மலை மேல் வெங்கடாசலபதி கோயில்,ஹிந்து அறநிலைத்துறைக்கு உட்பட்டது. இப் பகுதியில் தர்ஹா கட்ட முயற்சித்தும், அப்பகுதியில் அசைவ விருந்து வழங்கப்படுவதாகவும், அங்கு செல்வதற்கு ரோடு வசதி அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தாமரைக்குளம் பஸ் ஸ்டாப் அருகே பா.ஜ., வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பா.ஜ., மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமை வகித்தார். ஆன்மிக பிரிவு மாவட்ட செயலாளர் பொன்தர்மராஜன் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொறுப்பாளர் கோவிந்தராஜன், மாவட்ட நிர்வாகி ரவிச்சந்திரன், நிர்வாகிகள் செல்வராணி, சித்ரா, வெங்கடேஸ்வரி மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி