நுால் வெளியீட்டு விழா
தேனி: வடுகபட்டி அருட்பிரகாச வள்ளலார் கோயிலில் வராகநதி தமிழ்ச் சங்கம் சார்பில் நுால் வெளியீட்டு விழா நடந்தது. பாண்டியமகிழன் எழுதிய 'முருகமலையை முத்தமிடும் மேகங்கள்'என்ற கவிதை நுாலை வெற்றித் தமிழர் பேரவை மாவட்ட தலைவர் மணிகார்த்திக் வெளியிட்டார். தேனி தமிழ்ச் சங்க செயலாளர் சுப்பிரமணி பெற்றுக்கொண்டார். வையைத் தமிழ்ச் சங்க நிறுவனர் இளங்குமரன், எழுத்தாளர்கள் கவிக்கருப்பையா, தங்கேஸ்வரன், விருமாண்டி கண்ணீஸ்வரி, அன்புக்கரசன், பொன்ஸீ, வடுகபட்டி பேரூராட்சித் துணைத்தலைவர் அழகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் 12 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.