உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குப்பையை தரம் பிரித்து கொடுங்கள்

குப்பையை தரம் பிரித்து கொடுங்கள்

தேனி, ஆக.6– தேனி நகராட்சி சார்பில் குடியிருப்போரிடம் குப்பை சேகரிக்கப்படுகிறது. ஆனாலும் பொதுமக்கள் சிலர் தங்கள் குடியிருப்பு அருகே காலி இடங்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் குப்பையை கொட்டுகின்றனர். இதனால் குப்பை தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பைகள் தரம் பிரிக்கப்படாமல் கொடுப்பதால் துாய்மை பணியாளர்கள் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளில் குப்பைகளில் தரத்திற்கு ஏற்ப சுகாதாரம், மின்னணு கழிவுகள் என 4 வகையாக பிரித்து கொடுக்க மக்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக சுகாதார ஆய்வாளர் அலெக்ஸ் பாண்டியன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !