ஆர்ப்பாட்டம்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதியில் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய குழு உறுப்பினர் மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் மீனாட்சி சுந்தரம், மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பேரூராட்சி பகுதியில் வாரம் மூன்று நாள் குடிநீர் விநியோகிக்கவும், வாரச்சந்தை வளாகத்தில் புதிய வணிக வளாக கட்டிடம், சுடுகாடு மின் மயானம் ஆகியவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், கழிவு நீர் ஓடைகளில் முட்புதர்களை அகற்றவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.