மேலும் செய்திகள்
தி.மு.க., பொதுக்கூட்டம்
24-Sep-2025
ஆண்டிபட்டி : தி.மு.க., தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் ஆண்டிபட்டி தனியார் ஓட்டலில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடந்தது. தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜாராம் வரவேற்றார். தேனி தெற்கு மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தை விளக்கியும், வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., நிர்வாகிகள் தொண்டர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும் மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் செல்வேந்திரன், தீர்மான குழு இணை செயலாளர் ஜெயக்குமார், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆசையன் உட்பட பலர் பேசினர். ஆண்டிபட்டி நகர் செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.
24-Sep-2025