உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  தேர்தல் போலீஸ் பார்வையாளர் இரவோடு இரவாக மாற்றம்

 தேர்தல் போலீஸ் பார்வையாளர் இரவோடு இரவாக மாற்றம்

தேனி: வரவிருக்கும் சட்டசபை தேர்தலில், தேனி மாவட்ட சட்டம் - ஒழுங்கை கண்காணிக்க தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்ட ராஜஸ்தான் உளவுப்பிரிவு ஏ.டி.ஜி.பி., பிரபுலாகுமார், நேற்று முன்தினம் தேனி வந்தார். இவர் இரவோடு இரவாக மாற்றப்பட்டு, ஜார்க்கண்ட் ஐ.ஜி., பங்கஜ் கம்போஜ் நியமிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகளை பின்பிற்றவும், சட்டம் - ஒழுங்கை கண்காணிக்கவும் ஏ.டி.ஜி.பி., பிரபுலாகுமார் நியமிக்கப்பட்டார். விமானம் மூலம் நேற்று முன்தினம் அவர் மதுரை வந்தார். அங்கிருந்து கார் மூலம் இரவில் தேனி வந்து, விருந்தினர் மாளிகையில் தங்கினார். நேற்று காலை, மாவட்ட தேர்தல் அலுவலர் ரஞ்ஜீத் சிங்கை சந்தித்து பணியை துவக்க இருந்தார். இந்நிலையில், இரவோடு இரவாக பிரபுலாகுமாரை தேர்தல் ஆணையம் மாற்றி உத்தரவிட்டது. இதையடுத்து, அவசர அவசரமாக புறப்பட்டு சென்றார். இதுபற்றி, அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அவசர கால நிர்வாக நடவடிக்கையாக அந்த அதிகாரி மாற்றப்பட்டுள்ளார்' என்றார். அவருக்கு பதிலாக ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஜி., மற்றும் போலீஸ் வீட்டு வசதி வாரிய நிர்வாக இயக்குநருமாக உள்ள பங்கஜ் கம்போஜ், தேனி மாவட்ட சட்டம் - ஒழுங்கை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !