உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சாய்ந்த டெலிபோன் கம்பத்தால் அச்சம்

சாய்ந்த டெலிபோன் கம்பத்தால் அச்சம்

போடி: போடி ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்லும் அசேன் உசேன் தெரு மெயின் ரோட்டில் சாய்ந்த நிலையில் இருக்கும் டெலிபோன் கம்பத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். போடி ரயில்வே ஸ்டேஷன், சுப்புராஜ் நகர் நகராட்சி விளையாட்டு மைதானம், தினசரி மார்க்கெட், உழவர் சந்தை, வர்த்தக சங்கத்திற்கு செல்லும் முக்கிய ரோடாக அசைன் உசேன் தெரு மெயின் ரோடு அமைந்து உள்ளது. இந்த ரோட்டில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், டூவீலர், ஆட்டோ, கார், பள்ளி செல்லும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ரோட்டில் டெலிபோன் கம்பம் ஒன்று சாய்ந்து உள்ளது. அப்பகுதியில் உள்ள வீடு, கடைகள், அலுவலகங்களுக்கு தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. டெலிபோன் கம்பத்தின் அடிப்பகுதி அரிப்பு ஏற்பட்டு, சாய்ந்து உள்ளது. பல நாட்களாகியும் பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் சீரமைக்க வில்லை. இதனால் வாகனங்கள் செல்லும் போது விபத்து அபாயம் உள்ளது. விபத்து ஏற்படும் முன் ஆபத்தான நிலையில் சாய்ந்து உள்ள டெலிபோன் கம்பத்தை சரி செய்திட பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ