உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தோட்டக்கலை பயிர்களுக்குகாப்பீடு செய்ய அறிவுறுத்தல்

தோட்டக்கலை பயிர்களுக்குகாப்பீடு செய்ய அறிவுறுத்தல்

தேனி:இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பயிர் இழப்பை தடுக்க பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு கலெக்டர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார். பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் குறுவை பருவத்தில் சாகுபடி செய்துள்ள தக்காளி, கத்தரி, வெங்காயம் ஆகியவற்றிற்கு ஆக.,31க்குள், வாழை, மரவள்ளிக்கு செப்., 15க்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். வாழை ஒரு ஏக்கர் இழப்பீடு ரூ. 99,689 பெற பிரிமியம் ரூ.4984.46 செலுத்த வேண்டும். ஒரு ஏக்கர் கத்திரி பயிருக்கு இழப்பீடு ரூ. 26,182 பெற பிரிமியம் ரூ. 1309.10, வெங்காயத்திற்கு இழப்பீடு ரூ.45,250 பெற பிரிமியம் ரூ. 1828.12, தக்காளிக்கு இழப்பீடு ரூ.31,616 பெற பிரிமியம் ரூ. 1580.80 செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் மகசூல் பாதிப்பு, இயற்கை பேரிடர்களால் இழப்பு, அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பு உள்ளிட்டவற்றால் பயிர் பாதிக்கப்பட்டால் காப்பீடு தொகை பெறலாம். பயிர் கடன் பெற்ற விவசாயிகள் கடன் பெற்ற வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் மூலமும், அல்லது இசேவை மையங்கள் அல்லது https://pmfby.gov.inஎன்ற இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் விபரங்களை பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !