உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆட்சியில் பங்கு தொண்டர்களின் விருப்பம்  காங்., எம்.எல்.ஏ., ராஜேஷ்குமார் பேட்டி

ஆட்சியில் பங்கு தொண்டர்களின் விருப்பம்  காங்., எம்.எல்.ஏ., ராஜேஷ்குமார் பேட்டி

தேனி:ஆட்சியில் பங்கு என்பது கடைநிலை தொண்டர்களின் விருப்பம் என காங்., சட்டசபை குழுத் தலைவர் ராஜேஷ் குமார் தெரிவித்தார். தேனியில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் 30 ஆண்டுகள் காங்.,ஆட்சி செய்துள்ளது. ஆட்சியில் பங்கு என்பது காங்., கடைநிலை தொண்டர்கள், நிர்வாகிகளின் விருப்பம். தமிழகத்தில் 1967க்குப்பின் காங்., ஆட்சியில் இல்லை. தற்போது கூட்டணியில் அதிக தொகுதி தர வேண்டும். காங்., அங்கம் வகிக்கும் அரசு வர வேண்டும் என அகில இந்திய தலைமையை வலியுறுத்துகிறோம். இதே கோரிக்கையை திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் பேசுகின்றனர். கரூரில் நடந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு காங்., சார்பில் ரூ.1.2 கோடி நிவாரணம் வழங்கி உள்ளோம். பிரசாரம், கூட்டம் ஏற்பாடு செய்பவர்களுக்கு அரசு போதிய அடிப்படை வசதிகளை ஏற்பாடுகளை செய்து தர வேண்டும். விஜய் பிரசாரத்திற்கு சென்றவர்கள் பலர் நடிகரை பார்க்க சென்றவர்கள். இத்துயர சம்பவத்தில் அரசியலை கலக்க விரும்பவில்லை, என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை