பெண்ணிடம் அலைபேசி பறித்தவர் கைது
ஆண்டிபட்டி: தேவாரம் அருகே பண்ணைப்புரத்தை சேர்ந்தவர் ரீனா ஸ்ரீ 20, தனியார் நிறுவனத்தில் விநியோஸ்தராக பணிபுரிந்து வருகிறார். திண்டுக்கல்லில் நிறுவனத்தின் கலந்தாய்வுக் கூட்டத்திற்கு தோழிகளுடன் சென்று விட்டு, தேனி செல்வதற்காக வத்தலகுண்டு வழியாக ஆண்டிபட்டி சென்றுள்ளார். ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டில் இருந்த போது அவரது கையில் இருந்த மொபைல் போனை இளைஞர் ஒருவர் பறித்து சென்றார். ரீனா ஸ்ரீ புகாரில் போலீசார் மொபைல்போனை பறித்துச் சென்ற தேனியைச் சேர்ந்த கிஷோர் 19, என்பவரை கைது செய்து மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.