உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மசாஜ் சென்டர் நடத்தியவர் கைது

மசாஜ் சென்டர் நடத்தியவர் கைது

போடி:தேனி அருகே பழனிசெட்டியை சேர்ந்தவர் சூர்யபாண்டி 31, இவர் போடி கிருஷ்ணா நகர் மெயின் ரோட்டில் ஜாஸ்மின் ஆயுர்வேதா மசாஜ் சென்டர் 4 மாதங்களாக நடத்தினார். ஜூன் 15ல் மருத்துவ இணை இயக்குனர் கலைச்செல்வி தலைமையில் டாக்டர்கள் மசாஜ் சென்டரை சோதனை செய்தனர். அங்கு மசாஜ் சென்டர் நடத்தியதற்கான உபகரணங்கள் எதுவும் இல்லை. மூலிகை எண்ணெய், ஷாம்பு, மூன்று அறையில் மெத்தைகள் மட்டுமே இருந்தது. மசாஜ் சென்டர் நடத்துவதற்கான கல்வி தகுதி, அங்கு பணிபுரிய முறையாக படித்த மருத்துவர், மசாஜ் உதவியாளரை நியமிக்கவில்லை. தகுதி இல்லாத பெண்களை வைத்து மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன், நம்பிக்கை மோசடி செய்து மசாஜ் சென்டர் நடத்தி வந்தது தெரிந்தது. போடி அரசு மருத்துவமனை டாக்டர் ரூபியா புகாரில் மசாஜ் சென்டர் உரிமையாளர் சூர்ய பாண்டியை போடி தாலுகா போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை